கல்வி அமைச்சருக்கு கொலை மிரட்டல் : முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கைது

கல்வி அமைச்சருக்கு கொலை மிரட்டல் : முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கைது
X

கல்வி அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி

அமைச்ர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி திருவரம்பூர் எம்.எல்.ஏ, அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தற்போது தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவருக்கும் நவல்பட்டு பகுதியை சேர்ந்த திருவரம்பூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதையடுத்து நவல்பட்டு விஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் நவல்பட்டு விஜி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அச்சுறுத்தும் விதமாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வழியாக கொலை மிரட்டல் விட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு விஜி மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார் நவல்பட்டு விஜி. இந்த வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மீதான மனுநிலுவையில் உள்ள நிலையில் இன்றுஅக்டோபர் 16-ஆம் தேதி, நவல்பட்டு விஜி திடீரென்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை, நாளை மறுநாள் பிரதோஷம் காரணமாக நீதி மன்றம் செயல்பாடுகள் தாமதமாகும். அதற்கு அடுத்த நாள் மிலாடி நபி காரணமாக நீதிமன்றம் விடுமுறை இதன் காரணமாக ஜாமீன் கிடைக்க தாமதம் ஏற்படும். இந்த நிலையில் தான் அவர் கைது செய்யப்பட் டிருக்கிறார் என்று நவல்பட்டு விஜி தரப்பு கூறுகிறது.

அதேசமயம் நவல்பட்டு விஜியை கைது செய்ய சென்னையில் இருந்து உத்தரவு வந்ததை அடுத்து ஐஜி அலுவலகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இப்படி கைது செய்யப்பட்ட நவல்பட்டு விஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ai solutions for small business