வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண். 35 ,38 ,39 ,42 ,43 ஆகியவற்றில் நடைபெற்று வரும் பணிகளை திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்த ஆய்வு மேற்கொண்டார்
35 வார்டு எண் குழுமிரோடு பிச்சை நகர் கோல்டன்நகர் வார்டு எண் 38 பிள்ளையார்கோயில் தெரு, வடக்குபிள்ளையார் கோயில் தெரு, பாலாஜிநகர் வார்டுஎண் 39 இல் வேதாத்திரி நகர் வார்டுஎண் 42 ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் பிலோமினாள் நகர் தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெரு பகுதியில் அமைந்து வரும் தார்சாலை பணிகளை ஆய்வு செய்தார்
பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை அரசினர் ஆதிதிராவிடர்நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாப்பா குறிச்சி காட்டூர் பகுதியில் திருச்சி மாவட்டத்தில் தொடங்கி வைப்பதற்காக இடம் ஆய்வு செய்யப்பட்டது
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி பொது நிதியில் கட்டப்பட்டு வரும் வார்டு எண் 39 இல் பாத்திமாபுரம் பகுதியில் அமைந்து வரும் நியாய விலை கடை கட்டிடத்தை பார்வையிட்டார்
பாப்பாகுறிச்சி பகுதியில் அமைய உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நீயாயவிலைகடை ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மண்டலம் எண் 4ல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை மாநகராட்சி ஆணையர் துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டமும் நடைபெற்றது
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம் தர்மராஜ், லீலாவேலு, செந்தில், ரெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu