/* */

திருவெறும்பூரில் புதிய குளிர்சாதன பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவெறும்பூரிலிருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய குளிர்சாதன பேருந்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் புதிய குளிர்சாதன பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
X

திருவெறும்பூரில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய ஏசி பஸ் வழித்தடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் திருவெறும்பூர் ஆகும். இதன் அருகே பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பிஎஃப் தொழிற்சாலை, துவாக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி, உணவக மேலாண்மை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்ப கழகம் எனும் என்ஐ டி ஆகியவை உள்ளது.

இந்த பகுதிகளில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. எப்பொழுதும் கூட்ட நெரிசலாகவே பஸ்கள் சென்று வரும்.

தற்பொழுது இங்குள்ள பொதுமக்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு ஒரு ஏசி சொகுசு பேருந்து விட்டால் சிறப்பாக இருக்கும் என்று தொகுதி எம்எல்ஏ வும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று முதல் திருவெறும்பூரில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய ஏசி சொகுசு பஸ்சை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அதோடு அந்த பஸ்சில் ஏறி மத்திய பஸ் நிலையத்தில் பயணம் செய்தார்.

இந்த பஸ் துவாக்குடியில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு 22 கிலோமீட்டர் தொலைவுக்கு நாளொன்றுக்கு 16 முறை சென்று வரும். குறைந்தபட்சம் கட்டணம் 15 ரூபாய் அதிக பட்ச கட்டணம் 40 ரூபாய் ஆகும். அனைத்து பஸ் நிறுத்தத்திலும் நின்று செல்லும்.

விழாவில் தாசில்தார் செல்வகணேஷ், போக்குவரத்து துறையில் உயர் அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ, கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கே.எஸ்.எம். கருணாநிதி, சேர்மன் சத்யா கோவிந்தராஜ், முன்னாள் சேர்மன் மயில் பெரியசாமி, காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 16 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!