குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்

குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்
X

குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மதேஷ் பொய்யாமொழி ஆறுதல்  கூறினார்.

குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் கூறினார்.

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி திருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு போலீஸ் காலனி அண்ணா நகரைச் சேர்ந்த ராஜுவின் குடும்பத்தினரை சந்தித்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும். பள்ளி கல்வி துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் குவைத்தில் இருந்து ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கேரள முதலமைச்சர் பினராய்விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து உடல்கள் அனைத்தும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டை சேர்ந்த ராஜு என்பவரது உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த தகவலை அறிந்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது இல்லத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் கங்காதரன்,ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் மற்றும் தங்கமணி உள்பட திமுக நிர்வாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil