பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் இருவருக்கு 'மிட் -கேரியர்' விருது
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
புதுடெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சிறப்பு ஆராய்ச்சி பிரிவில் தனித்துவத்துடன் திறம்பட செயலாற்றும் பேராசிரியர்க ளுக்கு 'மிட்-கேரியர்' விருதினை வழங்கி சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான (2021) இவ்விருதுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல்துறை பேராசிரியரும், களத்தலைவருமான ரமேஷ் மற்றும் உயிர் தொழில் நுட்பத்துறை பேராசிரியரும். துறைத்தலைவருமான சிவ ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.
இச்சிறப்பு மிக்க விருதானது 15 முனைவர் (பி. எச்.டி) பட்ட ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியதற்காகவும், 5 தேசிய ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக முடித்தமைக்காகவும் பேராசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெற்ற பேராசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக யு.ஜி.சி.தலா 10 லட்சம் ரூபாய் ஆராய்ச்சி நிதியை வழங்கி சிறப்பிதுள்ளது.
இந்த தகவலை பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu