திருவெறும்பூர் தொகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவெறும்பூர் தொகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

திருவெறும்பூரில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் மாலை அணிவித்தார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தின விழா இன்று அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த எம் ஜி ஆரின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


மேலும் அ.தி.மு.க. கொடியேற்றி, அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜ், பொன்மலை பகுதி கழக செயலாளர் பாலசுப்ரமணியன், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!