திருவெறும்பூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை இடமாற்றத்திற்கு பூமி பூஜை

திருவெறும்பூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை இடமாற்றத்திற்கு பூமி பூஜை
X

எம்.ஜி.ஆர். சிலை புதிதாக வைக்கப்பட உள்ள இடத்தில் பூமி பூஜை போடப்பட்டது.

திருவெறும்பூர் அருகே எம்.ஜி.ஆர் .சிலை இடமாற்றத்திற்கு பூமி பூஜை மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசா பகுதியில் எம்.ஜி.ஆ.ர் சிலை நிறுவப்பட்டிருந்தது. தற்பொழுது அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருவதால் எம்.ஜி.ஆ.ர் சிலையை பெல் மெயின்கேட் நுழைவு வாயில் பகுதியில் அருகே புதிதாக பீடம் அமைத்து அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

இந்த பூஜைக்கு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார். விழாவிற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பவுனு என்கின்ற கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் கும்பக்குடி கோவிந்தராஜ், ராவணன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கும்பக்குடி குணா, முருகானந்தம், மனோகர், நவல்பட்டு பால மூர்த்தி, சாமிவேல், வக்கீல் மோகன்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் சுபத்ரா சுப்பிரமணி, வட்ட செயலாளர் வேல்முருகன், சபரீசன், துவாக்குடி நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார், தொழிலதிபர் குமார், ஐ.டி. விங் சத்திரியன் தங்கராஜ், வேங்கூர் ரத்தினம், தங்கமணி, தீன் காம்ப்ளக்ஸ் தீன் என்கின்ற அமீர் முகமது உள்ளிட்ட பெல் தொழிலாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!