திருச்சி காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
X
காவிரியில் மூழ்கி இறந்த நாகராஜ்.
திருச்சி காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கியவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர், மதுரையில் உள்ள ஒரு கடையில் துணி தைக்கும் டைலராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி பீம நகரிலுள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். பின்னர் அவர், காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் கடந்த 4 நாட்களாக தேடிவந்தனர்.

அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருச்சி கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சர்க்கார்பாளையம் அருகில் காவிரி கரையோரம் பிணமாக கிடந்த நாகராஜின் உடலை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!