கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன

கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன
X

திருச்சி அருகே கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டன.

திருச்சி அருகே கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார்கோட்டை அக்ரஹாரம் பகுதியில் குரங்குகள் அதிகமாக சுற்றித்திரிந்ததுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று கீழ கல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 குரங்குகளை வனத்துறை மற்றும் அப்பகுதியின் சமூக ஆர்வலர்களான விஸ்ராந்த் மற்றும் சக்கரபாணி ஆகியோர் உதவியுடன் பிடிக்கப்பட்டது.

பின்னர் பிடிபட்ட குரங்குகளை புலிவலம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு பத்திரமாக கொண்டுபோய் விடப்பட்டது.

இதனால் கல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுக்கும் வனத்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story