திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால்

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால்

திருச்சி அருகே பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடப்பட்டு வேலைகள் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடிகருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு,ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுபோட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறஉள்ளது.அதற்கான பூர்வாங்க பணி தொடங்கும் விதமாக நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் முன்னிலையில் முகூர்த்தகால் நடப்பட்டது.

இதன் பிறகு ஜல்லிகட்டு காளைகள் அவிழ்க்கும் தொழுவம்,தடுப்பு மற்றும் சிறப்புவிருந்தினர்கள்,பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் மேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கியது.

Tags

Next Story