சர்வதேச ஆட்டோமேஷன் வல்லுநர்கள் தினம்: திருச்சி என்ஐடியில் கொண்டாட்டம்
ஆட்டோமேஷன் நிபுணர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 28-ந் தேதி அன்று சர்வதேச தன்னியக்கவாக்க சங்கம், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகியவை சர்வதேச ஆட்டோமேஷன் வல்லுநர்கள் தினத்தை கொண்டாடுகிறது.
அதே போல இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை வகித்த திருச்சி பெல் பொது மேலாளர் எம் எஸ் ரமேஷ், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரிப்பை ஆட்டோமேஷன் மேம்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
ஐஎஸ்ஏ, என்ஐடி திருச்சி மாணவர்கள் பிரிவின் ஆசிரிய ஆலோசகர் பேராசிரியர் முனைவர் சிவகுமரன், மாணவர்களின் திறனை மேம்படுத்த திட்ட செயல்பாடுகள், ஹேகத்தான் போன்ற போட்டிகளையும், விருந்தினர்களின் உரைகளுக்கும் ஏற்பாடு செய்யுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் தனலட்சுமி கூறுகையில், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உள்ள கருவி மயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை தொழில்துறை ஆட்டோமேஷன் ஆய்வகத்தில் அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது என்றும் மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஐஎஸ்ஏ என்ஐடி திருச்சி மாணவர்கள் பிரிவு தலைவர் கார்த்திக் வாரியர், இதுவரை நடத்தப்பட்ட செயல்பாடுகளை பட்டியலிட்டதுடன், எதிர்கால திட்டங்களையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu