பெண்கள் எப்படி இருக்கவேண்டும்? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை

திருச்சி என்ஐடி விழாவில் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
திருச்சி என்.ஐ.டி.யில் நடந்த சர்வதேச மகளிர் தின நிறைவு விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெண்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ளது தேசிய தொழில்நுட்ப கழகம் எனப்படும் என். ஐ. டி. இங்கு சர்வதேச மகளிர் தின விழா கல்லூரியின் மகளிரியல் துறை சார்பில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. ஒரு வார காலம் நடந்த இவ்விழாவின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இன்று நடந்த விழாவிற்கு கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். கல்லூரி பதிவாளர் தாமரைச்செல்வன், மகளிர் துறை தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் தின விழாவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் தொடங்காத துறையே இல்லை பெண்கள் கால் பதிக்காத இடமும் இல்லை. தொழில்நுட்பம் ஆண் பெண் சமம் என்பது போல் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். கொரொனாவிற்கு பிறகு ஆன்லைன் மூலம் ஊறுகாய், சேலை உள்ளிட்ட பொருட்களை பெண்கள் ஆண்லைனில்விற்பனை செய்து வருகின்றனர்.
கோவிட் காலத்தில் கணவனுக்கு வேலை இல்லாத காலங்களில் இது பேருதவியாக இருந்தது. இதனால் தான் பாரத பிரதமர் இணையதளம் டெக்னாலஜியை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். நாட்டின் அரசியல் அமைப்பை ஏற்படுத்திய அம்பேத்கரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இணைய வழி வர்த்தகத்திற்கு உரிய செயலியாக பி ஆப் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மீன் விற்கும் பெண் கூட இணைய வழி மூலம் பணவரவுசெலவு செய்து வருகிறார். ஆனால் இது போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அதை தங்களது வாழ்க்கையில் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
குறுகிய கால நேரத்தில் வேலை செய்ய குடும்ப பெண்கள் வாட்ஸ் அப் மட்டும் பார்த்தால் போதாது கம்ப்யூட்டரையும் கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் அது உங்களுக்கு எந்த அளவு உதவியதோ அது போல் உதவும். இது போன்ற கொரோனா காலத்தில் என் ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கூட ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது.
படிக்கும் பொழுது கட்டுரை எழுத வேண்டும், பணம் சம்பாதிப்பதற்கு சுய தொழில் ஏதாவது செய்ய வேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சிக்காக எதையும் தொலைக்காதீர்கள் கண்ணீர் வடிக்காதீர்கள். சீரியல் பார்க்கும்போது கூட கண்ணீர் வடிக்க கூடாது. நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆண்கள் துணை புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் என்.ஐ.டி. மகளிரியல் துறை பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரியில் பேராசிரியர்கள் துறை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu