மழையினால் வீடு இடிந்தவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவி

திருவெறும்பூர் அருகே மழையினால் இடிந்த வீட்டை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, பத்தாளப்பேட்டை ஊராட்சி, கீழமாங்காவனத்தில், மாரியம்மாளின் வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது சொந்த நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கினார்.
உடன் இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம் கருணாநிதி, சேர்மன் சத்யா கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu