திருச்சியில் வீடு விடிந்து விழுந்தது-மூதாட்டி உயிர் தப்பினார்

திருச்சியில் வீடு விடிந்து விழுந்தது-மூதாட்டி உயிர் தப்பினார்
X

திருச்சி காட்டூரில் மூதாட்டி வசித்த வீடு இடிந்து விழுந்தது.

கனமழைக்கு திருச்சியில் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தனியாக இருந்த மூதாட்டி உயிர் தப்பினார்.

தமிழகத்தில் கடந்த சில 25 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். திருச்சியிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்தவர் ஜான் பீவி (வயது 82). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கனமழை காரணமாக இன்று அவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவருடைய உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக இருந்து வந்த மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மூதாட்டி பரிதவித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture