நேர்மையும்,வேர்வையும் மட்டுமே என்னிடம் உள்ளது- கமல்ஹாசன்

நேர்மையும்,வேர்வையும் மட்டுமே என்னிடம் உள்ளது- கமல்ஹாசன்
X

எனது வாகனத்தை சோதனை செய்தால் நேர்மையும்,வேர்வையும் மட்டுமே இருக்கும் என திருச்சி திருவெறும்பூரில் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் கூறினார்.

திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் கமல்ஹாசன் பேசும் போது,டாஸ்மாக்கை பாதியாவது மூடுங்கள் என்கிறேன் -அதை சொல்ல சொல்லுங்கள் போதும் .

அடுத்த தலைமுறையில் அனைவருக்கும் படித்த தாய்மார்கள் கிடைக்க வேண்டும். பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்காக ஒரு மணி நேரம் கொடுக்க வேண்டும், அவர்கள் நல்ல புத்தகங்களை,நல்ல பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.நான் வரும் போது என் வண்டியை சோதனை செய்தார்கள். என் வண்டியில் சோதனை செய்தால் நேர்மை,வேர்வை தான் என்னிடம் இருக்கும். அதை தாண்டி டீ குடிக்க சில்லறை தான் வைத்து இருக்கிறேன் . இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு