திருச்சி குவளக்குடி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு
திருச்சி அருகே குவளக்குடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு பங்கேற்றனர்.
காந்தியடிகளின் 153- வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகு செந்தில் தலைமை தாங்கினார்.
திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான் கென்னடி |பழனியப்பன், ஒன்றியக்குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திருச்சி கலெக்டர் சிவராசு கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆண்டுதோறும் 4 கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஊராட்சிகளுக்கு வரும் எந்த பணி தற்போது செயல்படுகிறது. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பொதுமக்களிடம் இருந்து கேட்டு அதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 100 நாள் வேலைக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ளார். இந்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
அரசு திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக மட்டுமல்லாமல் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத்தலைவர் மூலமாகவும் மக்களை சென்றடைகிறது. தி.மு.க. தலைவர் தேர்தல் வாக்குறுதியாக 505 வாக்குறுதிகளை அறிவித்தார். அதில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
இந்த பகுதிகளில் தேவைப்படும் குடிநீர், சாக்கடை, 100 நாள் வேலைத் திட்டம், 100 நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு தான் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளை உடனடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒன்று மக்கள் பள்ளி திட்டம். மற்றொன்று இடைநிற்றலை தவிர்த்தல் என 2 தீர்மானம் நிறைவேற்றி வருகின்றது,கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் அடுத்த வகுப்புக்கு வருகின்றனர்.இதனால் படிப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதைப் போக்குவதற்காக தன்னார்வத்தோடு வரும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் என ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நாள்தோறும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், இயக்கமாக வந்தால் 15 நபருக்கு ஒருவர் கற்றுக் கொடுத்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் உள்ளது. இந்த திட்டம் வரும் 18-ஆம் தேதி தொடங்க உள்ளது.
அதேபோல் இடை நிற்றல் என்பது மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்கள் உடனடியாக மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதாகும்.தமிழக முழுவதும் இடைநிற்றல் குறித்து குழு ஆய்வு செய்து ஒரு லட்சம் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் கல்வி அவசியமானது. அதனால் இந்த பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை வாயிலாக நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்ன என்றால் உங்கள் பகுதியில் பள்ளிக்குச் செல்லாமல் மாணவ, மாணவிகள் வேலைக்கு சென்று வந்ததால் அது பற்றிய தகவல்களை அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தால் நாங்கள் பள்ளி கல்வித்துறை மூலம் அவர்களை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu