திருச்சி அரசு பள்ளி மாணவன் ஜே.இ.இ. மெயின்தேர்வில் தேர்ச்சி

திருச்சி அரசு பள்ளி மாணவன் ஜே.இ.இ. மெயின்தேர்வில் தேர்ச்சி
X
மாணவர் அருண்குமார்
திருச்சி அரசு பள்ளி மாணவன் ஜே.இ.இ. மெயின்தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் என அழைக்கப்படும் என்‌.ஐ.டி. மாணவர்கள் நடத்தும் கற்பித்தல் மையம் சார்பில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெறுவதற்காக அரசு பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியானது வார விடுமுறை நாட்களில் நடைபெறும். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 2019 ஆம் ஆண்டில் 2 பேரும், 2020ஆம் ஆண்டில் 4 பேரும் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான 2020- 21 ஜே.இ .இ.மெயின் தேர்வில் இந்த பயிற்சி மையத்தில் படித்து வந்த திருச்சி மாவட்டம் செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார் 98.24 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 17,061ம் இடமும் ஓ. பி. சி, என். சி. எல்.பட்டியலில் 3,649 ஆம் இடமும் பெற்றுள்ளார். ஜே.இ.இ.மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணர் அருண்குமாரை திருச்சி என்.ஐ.டி.இயக்குனர் மினி ஷாஜி தாமஸ், கற்பித்தல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!