திருச்சியில் அண்ணா சிலைக்கு தே.மு.தி.க.சார்பில் மாலை அணிவிப்பு

திருச்சியில் அண்ணா சிலைக்கு தே.மு.தி.க.சார்பில் மாலை அணிவிப்பு
X

திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாசிலைக்கு தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையில் மாலை அணிவித்தனர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சியில் தே.மு.தி.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு அவரது 113-ஆவது, பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் தே.மு.தி.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாநில மாணவரணி செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார், மாநில மாற்றுத்திறனாளிகள் அணி துணை செயலாளர் குமரவேல், பொருளாளர் மில்டன் குமார், தொழிற்சங்க தலைவர் திருப்பதி, வழக்கறிஞர் ஐயப்பன், பகுதி செயலாளர்கள் வெல்டிங் சிவா, ராமு, கலைப்புலி பாண்டியன், விஜய் ஆனந்த், ராஜ்குமார், ஆறுமுகம், அகஸ்டின் நிக்கோலஸ் , ஆபிரகாம், இளைஞரணிசாதிக், மகளிர் அணி இந்துமதி, உமா உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture