திருச்சி குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றப்படும் அமைச்சர் தகவல்
திருச்சி மாநகராட்சியில் சேரும் குப்பைகள் அனைத்தும் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் கொண்ட இந்த குப்பை கிடங்கு உள்ளது இதில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.அதனால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். அப்பொழுது குப்பை கிடங்கு நடைபெற்று வரும் பணிகளை கண்காணிப்பு கேமரா உதவியுடன் காணொளி காட்சியில் அதிகாரியிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது.
2016 ஆம் ஆண்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது வாக்கு சேகரிக்க இந்த பகுதிக்கு வந்தபோது இந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த குப்பை கிடங்கால் படும் இன்னல்களை தெரிவித்தனர். மேலும் தங்களது குடும்பத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறி வேதனை அடைந்தனர்.
மேலும் கோடை காலங்களில் சில சமூக விரோதிகள் இந்த குப்பை கிடங்கை கொழுத்தி விடுவதால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டதும் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே இந்த குப்பை கிடங்கை ஆய்வு செய்து எதிர்க்கட்சியாக இருக்கும் போதே சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன் என்றும்.
தற்போது ஆளுங்கட்சியாக உள்ளம் என்றும் ஸ்ரீரங்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் அரியமங்கலம் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
தற்போது திருச்சி மாநகராட்சியில் உள்ள மண்டல வாரியாக குப்பைகள் இங்கு வந்து கொட்ட படுவதாகவும் இந்த குப்பைகள் 70 முதல் 80 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருவதாகவும். இதனால் லட்சம் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி உள்ளதாகவும், இவை அகற்றப்பட வேண்டும் தற்பொழுது 2019ஆம் ஆண்டு வரை சேர்ந்த குப்பைகளை அகற்றுவதற்கு உரிய வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதுவும் வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை அந்த பணி நடைபெறும் அதன் பிறகு மீதமுள்ள குப்பைகள் அடுத்த ஆறு மாதகாலத்தில் அகற்றப்படும்.
ஒரு வருட காலத்தில் இங்கு உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு இந்த இடத்தில் வேறு என்ன கொண்டு வரலாம் என்பதை தமிழக முதல்வர் தான் முடிவு செய்வார் என்று கூறினார்.
அப்போது திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், தலைமை பொறியாளர் அமுதவள்ளி, பொறியாளர் சிவபாலன் மற்றும் அரசு அதிகாரிகளும் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu