திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
X
சேதப்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்.
இளைஞரை தாக்கிய வழக்கில் திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள எலந்த பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் முத்துக்கருப்பன் (வயது 26). கூலி தொழிலாளி. காந்தலூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து என்பவருக்கும் பட்டேல் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை உள்ளது.

இந்த நிலையில் பட்டேல் என்பவரிடம் முத்துகருப்பன் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து மற்றும் அவரது மகன் பார்த்திபன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரமணி, கருப்பையா ஆகியோர் சேர்ந்து கை மற்றும் கம்பால் முத்துகருப்பனை தாக்கி அவரது இருக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து உடைத்து சூறையாடியதோடு முத்து கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக முத்துகருப்பன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அரசு நிலத்தில் கட்டுமானம், மரம் வெட்டும் சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ..!