பெரியார் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாலை அணிவிப்பு

பெரியார் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாலை அணிவிப்பு
X

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 

பெரியார் தினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு, மாவட்ட தி.மு.க சார்பில் இன்று திருச்சி காட்டூர பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.வுமான கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், செந்தில், பகுதி செயலாளர் நீலமேகம், தர்மராஜ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி, பகுதி செயலாளர் மதிவாணன், மெடிக்கல் மோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பகுதிகள், பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!