திருச்சி: வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி: வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு
X

திருச்சி மாவட்டம்திருவெறும்பூர் பகுதியில்  வெள்ளம் பாதித்த வயலவெளிகளை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து ஆவண செய்வதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி, ஜெர்மன் சத்யா கோவிந்தராஜ், கவுன்சிலர் பழனியப்பன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story
ai in future agriculture