திருச்சி அரியமங்கலம் பகுதி மரப்பட்டறையில் தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் பகுதி மரப்பட்டறையில் தீ விபத்து
X

திருச்சி அருகே அரியமங்கலம் மரப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது. 

திருச்சி அருகே மரப்பட்டறையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், பரபரப்பு நிலவியது.

திருச்சியில், தஞ்சை சாலை அரியமங்கலம் பகுதியில் மரப்பட்றை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று இரவு திடீரென மரப் பட்டறையில் இருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மரப்பட்டறை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

திபுதிபுவென்று பற்றி எரிந்த தீயை கண்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story