திருச்சியில் கோடி கணக்கான சொத்துக்கள் அபகரிப்பு: தாசில்தார், ஆர்டிஓ மீது புகார்

திருச்சியில் கோடி கணக்கான சொத்துக்கள் அபகரிப்பு: தாசில்தார், ஆர்டிஓ மீது புகார்
X

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த நில அபகரிப்பில் பாதிக்கப்பட்டோர்.

கோடி கணக்கான சொத்து அபகரிப்புக்கு உதவிய தாசில்தார், திருச்சி ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டோர் மனு அளித்தனர்.

திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் பட்டேல். இவரது மகள் மல்லிகா கடந்த 2013ஆம் ஆண்டு திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டி பகுதியிலிருந்து நடராஜன் அவரது மனைவி ஹேமலதா மற்றும் பலரிடம் இருந்து சுமார் 14 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

பின்னர் நடராஜன் மற்றும் ஹேமலதாவிடம் வாங்கிய சொத்துக்கள் சிலவற்றைப் மோசடி செய்து மல்லிகாவிடம் விற்பனை செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அதன் உண்மையான உரிமையாளர்களான சிவகங்கையை சேர்ந்த கிருஷ்ணன் செட்டியார் மற்றும் எலந்தப் பட்டியைச் சேர்ந்த முருகவேல் குடும்பத்தாரிடம், மல்லிகா மீண்டும் அதே இடத்தை 2வது முறையாக பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த இடத்திற்கு மல்லிகா பட்டா பெற விண்ணப்பித்து இருந்தபோது, ஹேமலதாவும், நடராஜனும் எதிர்ப்பு தெரிவித்து, திருவெறும்பூர் தாசில்தார், திருச்சி ஆர்டிஓ மற்றும் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு மல்லிகாவிற்கு தான் இடம் உரிமை எனக்கூறி பட்டா வழங்கப்பட்டது. பின்ன்ர் மல்லிகா அந்த இடத்தை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலையில் மல்லிகாவிற்கு கிருஷ்ணன் செட்டியார் மற்றும் முருகவேல் ஆகியோரின் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் மூலம் விற்பனை செய்த சென்னையை சேர்ந்த நடராஜன் மற்றும் ஹேமலதா ஆவணங்களை ரத்து செய்யக்கோரி சென்னை மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் நடராஜன் ஹேமலதா ஆகியோர், திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் மற்றும் திருச்சி ஆர்டிஓ விஸ்வநாதனிடம் பட்டா மாறுதல் கோரி கொடுத்த மனுவில் நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்களின் மனு சாரம்சத்தை மல்லிகாவிற்கு செல்வ கணேசனும், விஸ்வநாதனும் கொடுக்க மறுத்தனர்.

கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்களை திமுக நிர்வாகியான எலந்தப் பட்டி மாரிமுத்து நடராஜன் மற்றும் ஹேமலதா மூலம் அபகரிப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் திருச்சி ஆர்டிஓ விஸ்வநாதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தங்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மல்லிகாவின் பெற்றோர் மற்றும் அவரிடமிருந்து இடம் வாங்கியவர்கள் என அனைவரும் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story