இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்வு: திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்வு: திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
X

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.ஒருங்கிணைப்பாளர் களாக தேர்வானதையொட்டி திருச்சியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வானதை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் இன்று மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணியன், தண்டபாணி, அணி செயலாளர்கள் பெல் கார்த்தி, ராஜமணிகண்டன், நகர செயலாளர் முத்துக்குமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!