/* */

திருச்சியில் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

திருச்சியில் புதிய மின் இணைப்பிற்கு ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது
X
கைது செய்யப்பட்ட விக்டர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஆர்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர். நியாத் ஷகியா. இவர் மத்திய பொதுத்துறை பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நவல்பட்டு ஆர். எஸ்.கே. நகரில் உள்ள தன்னுடைய புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற நவல்பட்டு மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதில் அவரது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால் ரூ.18 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என நவல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக வேலை பார்க்கும் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கோகுல் நகரை சேர்ந்த விக்டர் என்பவர் கேட்டதார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத நியாத் ஷகியா திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரை நாடியுள்ளார்.

அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்று வ நியாத் ஷகியாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.அந்த பணத்தை கொடுப்பதற்கு விக்டரை இன்று காலை நியாத் ஷகியா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது விக்டர் அப்பலோ மருத்துமனை அருகே வரும்படி கூறி உள்ளார்.

அதற்கு நியாத் ஷகியா தான் அரியமங்கலம் பால்பண்ணையில் இருப்பதாகவும் அதனால் அங்கு வரும்படி விக்டரிடம் கூறியதாகவும் அதனடிப்படையில் விக்டர் அரியமங்கலம் பால் பண்ணைக்கு வந்ததாகவும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நியாத் ஷகியாவை நவல்பட்டு அலுவலகம் வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அதனடிப்படையில் நியாத் ஷகியா நவல்பட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்று விக்டரை சந்த்து பணத்தைகொடுத்துள்ளார்.

பணத்தை பெற்ற விக்டர் நியாத் ஷகியாவிடம் இருந்து வங்கி விட்டதாக செல்போனில் உதவி பொறியாளர் கமருதீனுக்கு தகவல் சொல்லிய போது மறைத்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விக்டரை கைது செய்தனர்.

அதன் அடிப்படையில் விக்டரிடம் நவல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ததில் மின்சார வாரிய உதவி பொறியாளர் கமருதீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக விக்டர் வாக்குமூலம் அளித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கமருதீன் தலைமறைவான குற்றவாளியாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 March 2022 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...