திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு

திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு
X
திருச்சி துவாக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பெல் நகர் பகுதியில் பால கணபதி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அர்ச்சகருக்கு உதவியாளராக திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த மனோஜ் குமாரின் மகன் மணிகண்டன் (வயது 24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு குளிக்கச் சென்ற போது, கோவிலின் பின்புறம் உள்ள மின்மோட்டாரை ஆண் செய்தபோது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் மயங்கி கிடந்துள்ளார். இதை அருகில் உள்ளவர்கள் பார்த்ததால் உடனடியாக மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!