திருச்சி அரசு மருத்துவமனைக்கு துப்பாக்கி தொழிற்சாலை 20 சக்கர நாற்காலிகள் வழங்கல்
திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாய நிலை மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு உதவும் வகையில் சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்க திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்து
இதன்படி முதல்கட்டமாக இன்று கொரோனா தொற்றாளர்களை உட்கார வைத்து அழைத்துச் செல்வதற்காக 20 சக்கர நாற்காலிகளை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை தீயணைப்பு அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேவைப்படும் உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu