திருச்சியில் மோடி படத்தை கிழித்து ஜனநாயக நல கூட்டமைப்பினர் போராட்டம்

திருச்சியில் மோடி படத்தை கிழித்து ஜனநாயக  நல கூட்டமைப்பினர் போராட்டம்
X

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் பிரதமர் மோடி படத்தை கிழித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய மந்திரி மகனால் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று அரியமங்கலத்தில் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் பாலமுருகன், மக்கள் உரிமைக் கூட்டணி ஜோசப், காசிம் அகில இந்திய ஏழை மக்கள் கட்சி ஜான் பாஷா, அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கம் ஷைனி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா படங்களை கிழித்து எறிந்தனர். படங்கள் கிழிக்கப்பட்டபோது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கையில் காயம் பட்டது.பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags

Next Story