துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு கருவிகள்; 13 முதல் 19 வரை கண்காட்சி

துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு கருவிகள்; 13 முதல் 19 வரை கண்காட்சி
X
துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு தயாரிப்பு கருவிகளை பொதுமக்கள் கண்காட்சிக்கு வரும் 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை வைக்க உள்ளனர்.

அசாதிகா அமிர்த மஹோத்சவ் மற்றும் இந்தியா 75-ன் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளூர் பொதுமக்கள் கண்காட்சிக்கு வரும் 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை வைக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி கான்பூரில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா லிமிடெட் டின் (AWEIL) ஒரு அங்கமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் ஊழியர் கிளப்பில் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் பொதுமக்கள் கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க உள்ளார். கண்காட்சியில் பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டுகளிக்கலாம் என திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!