கோவாவில் இறந்த கப்பல் படை அதிகாரி உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது

கோவாவில் இறந்த கப்பல் படை அதிகாரி உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது
X
தனி விமானம் மூலம் கப்பல் படை அதிகாரி உடல் திருச்சிக்கு வந்தது.
கோவாவில் மரணம் அடைந்த கப்பல் படை அதிகாரி உடல் தனி விமானம் மூலம் திருச்சி வந்தது.

திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் ராஜேஷ் (வயது 38). இவர் கோவாவில் கப்பல் படையின் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோவாவில் பணியில் இருந்த போது திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக மரணம் அடைந்தார். இதனையொட்டி அவரது உடல் சொந்த ஊரான திருச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைத்து நல்லடக்கம் செய்வதற்காக கோவாவிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. முன்னதாக கப்பல் படையின் கமாண்டர் மற்றும் கப்பல் படை வீரர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தேசிய கொடி போர்த்தப்பட்ட உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!