திருச்சி அரியமங்கலத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி

திருச்சி அரியமங்கலத்தில்  கொரோனா விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
X

திருச்சி அரியமங்கலத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு ஓவிய  கண்காட்சியில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

திருச்சி அரியமங்கலத்தில் ஓவியர் சித்தன் சிவாவின் கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.

சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒவியர் சித்தன் சிவாவின் கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி தொடக்க விழா திருச்சி அரியமங்கலம் லெட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஓவிய கண்காட்சியை பார்வையிட்டு , வாழ்த்துரையாற்றி சிறப்பித்தார்.ஒய்வு பெற்ற ஆசிரியர் அ.கலைமணி வரவேற்புரை ஆற்றினார் பி .ஹெச். இ .எல் , தொ.மு.ச துணைச் செயலாளர் சுரேஷ் கனி நன்றி கூறினார்.

நிகழ்வுவிற்கு லெட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி தாளாளர் தாமரை செல்வி,அன்பாயலம் செந்தில்குமார்,தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், சாமி தற்காப்புக்குழு கூடம் ஆசிரியர் டி.ஜீவானந்தம், ஆசிரியர் ஸ்டாலின், மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் என்.வெங்கடேஷ், என்.தயானந்த், சுரேஷ் , டீசல் லோகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா