சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 2-வது பிரதேச நிலை (Divisional leval) உடற்தகுதி விளையாட்டு சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2022 போட்டி நடைபெற்றது. இதில் சேலம், கரூர் , திருச்சி, ஈரோடு , நாமக்கல் போன்ற மாவட்டத்திலிருந்து சுமார் 225 பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள் .
இதில் திருச்சி பொன்மலை சாமி தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 18 தங்கம், 4 சில்வர், 3 வெண்கலம் பெற்று வந்தவர்களுக்கு , பொன்மலையில் இன்று மாலை பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமை தாங்கினார். இதில், தண்ணீர் அமைப்பு நிர்வாகி ஆர்.கே.ராஜா, சாமி தற்காப்பு கலைக்கூடம் ஆசிரியர் துரை.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று, பதக்கம் வாங்கியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி 46-வது வார்டு உறுப்பினர் கோ.ரமேஷ் பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜீ.சஹானா ஸ்ரீ, ஆர்.ஹேமா ஸ்ரீ, ஹர்சாவர்த்தினி, தீபிகா, ஜே.சக்தி ஸ்ரீ, கே.வி.பிரபஞ்சன் , மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஈஸ்வரன், சீனிவாசன், பாலு மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu