துவாக்குடியில் தி.மு.க.விற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனுதாக்கல்

துவாக்குடியில் தி.மு.க.விற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனுதாக்கல்
X

துவாக்குடி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

துவாக்குடி நகராட்சியில் திமுகவிற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துவாக்குடி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் இடம் ஒதுக்கப்படாததால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று துவாக்குடி நகராட்சியில் தனியாக 10-வது வார்டுக்கு மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் 13-வது வார்டுக்கு நகர குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!