மொபட்டுடன் வாய்க்காலில் விழுந்து கல்லூரி காவலாளி பலி

மொபட்டுடன் வாய்க்காலில் விழுந்து கல்லூரி காவலாளி பலி
X

பைல் படம்.

அரியமங்கலம் சாலை அருகே மொபட்டுடன் வாய்க்காலில் விழுந்து கல்லூரி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 72). இவர் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.கல்லூரி விடுதியில் 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் எஸ்.ஐ.டி.யில் இருந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அரியமங்கலம் சாலையில் ரீச் அவன்யூ அருகில் உள்ள பாலக்கட்டை அருகே அவர் சென்றபோது மொபட் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கிருந்த வாய்க்காலில் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பழனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!