திருச்சி என்.ஐ.டி.யில் வலிப்பு நோய் கண்டறிதல் பற்றிய மருத்துவ சொற்பொழிவு

திருச்சி என்.ஐ.டி.யில் நடந்த மருத்துவ சொற்பொழிவில் காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் பேசினார்.
திருச்சி என்.ஐ.டி. எனப்படும் தேசிய தொழில் நுட்ப கழகத்தில் இன்று மருத்துவ சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'வலிப்புத்தாக்கத்தைக் கண்டறிதல் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருச்சி என்.ஐ.டி.யின் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் என் சிவகுமாரன் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். டாக்டர் தனலட்சுமி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பருக்கு நினைவு பரிசு வழங்கினார்.
வலிப்பு நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மையில் கருவி நுட்பங்களின் முக்கியத்துவத்தை அவர் விவாதித்தார். குறிப்பாக டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் மேம்பட்ட கருவி நுட்பங்களான மேக்னடோஎன்செபலோகிராபி (MEG), செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (MRI) மற்றும் சிங்கிள் பாசிட்ரான் எமிஷன் கம்ப்யூட்டட் டோமோகிராபி (SPECT) மற்றும் வலிப்பு நோயறிதலில் இந்தக் கருவிகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பற்றி பேசினார். மூளை அறுவை சிகிச்சையில் அதிக துல்லியமான கருவிகளின் சாத்தியம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த தீவிர நரம்பியல் கோளாறில் உள்ள சில சவாலான ஆராய்ச்சி சிக்கல்களையும் அவர் எடுத்துரைத்தார். மற்றும் மேம்பட்ட மாதிரிகள், அளவீடுகள் மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளுடன் இந்தியாவில் மூளை ஆராய்ச்சியை வலியுறுத்தினார். நோயாளிகள் விரைவாக குணமடைய நரம்பியல் மறுவாழ்வு பற்றிய ஆராய்ச்சி மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். வலிப்பு நோயின் போது கால்-கை வலிப்பு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்கை பற்றி பேசி தனது உரையை முடித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu