தூய்மை பணியாளர்களின்மனக்குமுறலை வெளியிட்டார் திருச்சி சமூக ஆர்வலர்
திருச்சி சமூக ஆர்வலர் கிஷோர்குமார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளரும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாழவந்தான் கோட்டையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் பொது பார்வையாளராக கிஷோர் குமார் ஆகிய நான் உள்ளிட்ட மய்ய தோழர்கள் கலந்துகொண்டோம்.
அப்பொழுது வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்ள எட்டு நபர்கள் பணியாற்றி வருவதாகவும், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வது மட்டுமின்றி, ஊராட்சி பகுதி பொது சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய தங்களை ஊராட்சி தலைவர் வற்புறுத்துவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை, மாஸ்க் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் தங்களுக்கு வாழவந்தான் கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
இவ்வாறு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொது சாக்கடையில் இறங்கி பணி செய்வதால் தங்களது கை, கால் மற்றும் உடல் முழுவதும் தேமல், காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக ட உயர் அதிகாரிக்கு புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
எனவே திருச்சி மாவட்ட ஆட்சியரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் எந்திரங்கள் செய்ய கூடிய சாக்கடை அள்ளும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுத்து நோயினால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனமக்கள் நீதி மய்யம் சார்பில் மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu