திருச்சி சின்னமாவடிக்குளத்தை ஆக்கிரமித்த முக்கிய புள்ளி யார்?
திருச்சி மாவடிக்குளத்தின் ஒரு பகுதி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா கீழக்குறிச்சி ஊராட்சியில் உள்ளது சின்னமாவடிக்குளம். சுமார் 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பலர் ஆக்கிரமித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான சம்சுதீன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குளத்தின் தற்போதையை நிலை பற்றிய விவரத்தை தெரிவிக்கும்படி கேட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது கீழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களின் பெயர் பட்டியலை கேள்வி எழுப்பிய சம்சுதீனுக்கு அனுப்பி உள்ளார்.
அந்த பட்டியலில் இயற்கை ஆர்வலர் சங்க தலைவர் கணேசன், அருள், மகிமை ராஜ், ஜெயா செபாஸ்டின், துரை,சூரிய கலா, மணி, மணிகண்டன், சந்தோஷ், ஜெயராஜ், மற்றொரு அருள்,ஷர்மிளா ஆகிய 12 பேர் பெயர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வரத்து வாய்க்கால்கள், வடிகால் வாய்க்காயல்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் குளம் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் பெயர் பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து குளத்தை மீட்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu