சிறுவர்பூங்கா, நெல்கொள்முதல் நிலையம் : அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திறப்பு

சிறுவர்பூங்கா, நெல்கொள்முதல் நிலையம் : அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திறப்பு
X

 கீழக்குறிச்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி.

கீழக்குறிச்சியில் சிறுவர் பூங்கா, நெல்கொள்முதல் நிலையம் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் சிறுவர் பூங்கா மற்றும் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி திருநகர் பகுதியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர், கீழக்குறிச்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சார்பாக நடத்தப்பட்ட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் மாரியப்பன், ஊராட்சி தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!