/* */

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி வழங்கிட வலியுறுத்தி நூதன போராட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி வழங்கிட வலியுறுத்தி நூதன போராட்டம்
X

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செல்பி எடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து வணிகம் செய்ய அரசு துணை போகிறது என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டு செய்துவரும் நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி மாநகர் முழுதும் பி.எஸ்.என்.எல். உடன் செல்பி எடுத்து பல்வேறு விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தினர்.

அதன் ஒருபகுதியாக திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதி குழு சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின், பகுதித் தலைவர் யுவராஜ், நிர்வாகிகள் செந்தில், சந்தோஷ், முருகா, மோகன், வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கடந்த இரு மாதங்களில் தனியார் செல்போன் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருவெறும்பூரில் நடத்திய விழிப்புணர்வு போராட்டம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

Updated On: 19 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’