திருவெறும்பூர் அருகே அக்காள், குழந்தையை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

திருவெறும்பூர் அருகே  அக்காள், குழந்தையை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
X

கைது செய்யப்பட்ட தனக்கோடி.

திருவெறும்பூர் அருகே அக்காள், குழந்தையை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (27). இவர் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் டைசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தனலெட்சுமிக்கும் மைக்கேல் டைசனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனலெட்சுமி தாய்வீட்டில் தனது ஒரு வயது மகனோடு வசித்து வந்துள்ளார்.

தம்பி தனகோடி (22)அதே வீட்டின் மாடியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனகோடி, தனலட்சுமி மற்றும் அவரது ஒரு வயது மகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனகோடியை கைது செய்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில் திருமணமாகி சென்ற தனலட்சுமி மீண்டும் வீட்டிற்கு வந்து இருப்பது பிடிக்காமல் அடிக்கடி தகராறு வரும் என்றும் அதுபோல் அன்றும் தகராறு வந்ததாகவும் அந்த கோபத்தில் தனலட்சுமி மற்றும் அவரது மகனை வெட்டி விட்டு தப்பி சென்றதாகவும் தனகோடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags

Next Story