திருச்சி பொன்மலை பகுதியில் உடைந்த குறும்பாலத்தை சரி செய்ய கோரிக்கை

திருச்சி பொன்மலை பகுதியில் உடைந்த குறும்பாலத்தை சரி செய்ய கோரிக்கை
X

திருச்சி பொன்மலை பகுதியில் குறும்பாலம் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

திருச்சி 36-வது வார்டில் உடைந்த குறும்பாலத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பொன்மலை அடிவாரம் பகுதியில் ரேஷன் கடை அருகில் குறும்பாலம் உடைந்து பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் இந்த தெரு வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் லாரி மூலம் பொருள் எடுத்து வருவதில் கடினமாகவும் உள்ளது.

எனவே உடனடியாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மக்கள் சக்தி இயக்கம், மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!