சமயபுரம் அருகே சிக்கிய மது பாட்டில்கள் - தப்பியோடிய இருவர் கைது

சமயபுரம் அருகே சிக்கிய மது பாட்டில்கள் - தப்பியோடிய இருவர் கைது
X
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை-மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை-மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் எஸ்ஐ ராஜசேகர் தலைமையில் உதவி ஆய்வாளர் குமரேசன், எஸ்எஸ்ஐ ஜெயசீலன்,போலீசார்கள் குரு, ராஜேஷ், ராஜேந்திரன் மற்றும் வில்பிரட் ,பாலமுருகன்,ஆகிய கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 4320 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த லாரன்ஸ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் தப்பியோடிய லாரன்ஸை வலைவீசி தேடி வந்த நிலையில் இன்று தப்பியோடிய குற்றவாளிகள் மண்ணச்சநல்லூர் தெற்கு இருங்களூரை சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்(45) மற்றும் சமயபுரம் கல்லுக்குடியை சேர்ந்த ராஜா முஹம்மது மகன் சர்தார் (45) ஆகியோரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai marketing future