திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை
X

திருச்சி ‘பிம்’ ஊழியர்கள் பா.ஜ.க. நிர்வாகியிடம் மனு அளித்தனர்.

திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவன ஊழியர்கள் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாகம் நேரு நகர் பகுதியில் இயங்கி வருகிறது. 'பிம்' எனும் பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம். இந்நிறுவனம் முன்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை கல்விக்கான பிரிவாக இவ்வளாகத்தில் தொடங்கப்பட்டது. நாளடைவில் தன்னாட்சி பெற்ற தனி நிறுவனமாக பின்பு இயங்கத் தொடங்கியது. இந்நிறுவனத்தில் பணியில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படி பல்கலைக்கழக ஊழியர்களாக சேர்க்கப்பட்டு பணிபுரிந்து வந்தனர்.

தற்பொழுது அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தில் பணிபுரிந்த 6 நபர்களை அவர்களின் 58 வயதிலேயே நிறுவனம் ஓய்வு கொடுத்துவிட்டதால் கொதித்தெழுந்த ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு ஏற்கனவே மனு அனுப்பினர்.

அந்த கோரிக்கை மனுவில் எங்களது ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆறு நபர்களுக்கு உடனடியாக பென்சன் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு 7-வது ஊதியக் குழுவின் விதிப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட இருந்தனர்.

மேலும் திருச்சி மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர் இந்திரனிடம் கோரிக்கை மனுவை நேரில் வழங்கினர்.

இதனையடுத்து ஊழியர் சங்கத்தினர் இதுகுறித்து திருச்சி கலெக்டர் மற்றும் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story