பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் 39 பாடங்களுக்கு அனுமதி

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் 39 பாடங்களுக்கு அனுமதி
X

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் (பைல் படம்).

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் 39 பாடத்திட்டங்களுக்கு மானியக்குழு அனுமதி அளித்து உள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

பல்கலைக்கழக மானியகுழுவின் தொலைதூரக் கல்வி பணியகத்தின் நிபுணர் குழு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மற்றும் அதிகாரிகளுடன் மெய்நிகர் சந்திப்புகளை நடத்தியது. தொடர்ந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்விக்கான மையத்தில் 2021-ம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு திறந்த தொலைதூர கற்றல் முறையில் வழங்கும் 39 பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மையத்தின் இயக்குனர் எட்வர்டு பெஞ்சமின்னுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!