தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொன்மலை ரயில்வே மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, ஈஸ்வரன் , மகளிர் அணி நிர்வாகி லலிதா , ஆகியோர் முன்னிலயில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

சிலம்பம் மற்றும் விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண் குழந்தைகள், மாணவிகளுக்கு தன்னம்பிகை நூல்கள் , இனிப்பு , துணிப்பைகள் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான இவ்வாண்டின் நோக்கமாக அரசு வெளியிட்டுள்ள "ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பெண் குழந்தைகளை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் விழிப்புணர்வு , மேம்பாட்டு உரையாற்றினார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு, கல்வி, சமூக அளவில் திறன் மேம்பாடு வளர்த்தல், எதிர்கொள்ளும் ஆற்றல், வாழ்வியல் முறைகள், பாலின சமத்துவம், பெண் குழந்தைகள் உழைப்பு சுரண்டலுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்தாக்குதல், வன்கொடுமை இவற்றில் இருந்து தற்காத்து தான் சார்ந்த சமூகத்தையும் காத்து ஆற்றலுடன் எதிர்கொண்டு முன்னேற வேண்டும் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாமி தற்காப்புக்குழு கூடம் நிர்வாகி டி.ஜீவானந்தம், சதானாஸ்ரீ, ஹேமா, சிவகாமி, சந்திரா, தனலெட்சுமி, மக்கள் சக்தி இயக்க சீனிவாசன், வெங்கடேஷ், சந்திரசேகர், இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!