திருச்சி பொன்மலையில் கர்ப்பிணி மருமகளை தாக்கிய மாமனார் கைது

திருச்சி பொன்மலையில்  கர்ப்பிணி மருமகளை  தாக்கிய மாமனார் கைது
X
திருச்சி பொன்மலை அருகே கர்ப்பிணி மருமகளை தாக்கிய மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 50), டிரைவர்.இவரது மகன் கஜேந்திரபாபு (வயது 25). திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.

கடந்தாண்டு கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது இன்ஜினியரிங் படித்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ஹர்சினியை காதலித்து வந்தார்.குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதத்துக்கு முன்ஹர்சினியை திருமணம் செய்தார்.

இதையடுத்து தந்தை செல்வக்குமார் வீட்டில் மனைவியுடன் கஜேந்திரபாபு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சிங்கப்பூரில் வேலைகிடைத்ததால் தனது தந்தை வீட்டில் மனைவியை விட்டு, விட்டு கஜேந்திரபாபு சென்று விட்டார். தனது தங்கை மகளை கஜேந்திரபாபு திருமணம் செய்துகொள்ளாததால் ஆத்திரத்தில் இருந்த செல்வக்குமார்,நேற்று 3 மாதம் கர்ப்பமாக உள்ள மருமகள் ஹர்சினியிடம் தகராறு செய்து தாக்கினார்.

இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹர்சினி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அஜிம் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!