முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி
X

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இரண்டு நாள் பயணமாக திருச்சிக்கு நேற்று வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ளார். இன்று காலை கவர்னர் ரவி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!