திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
X

திருச்சி புறநகர்  தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.பி.ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நாளையும் (22-ம் தேதி) நாளை மறுநாளும் (23-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்த உள்ளனர்.

இந்த தேர்தலில் திருவெறும்பூர் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், துவாக்குடி நகரம், கூத்தைப்பார் பேரூராட்சி ஆகியவற்றிற்கு பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்திலும், பொன்மலை பகுதி, அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதிகளுக்கு காட்டூர் ஆர்.பி. ஜி. மகாலிலும், லால்குடி வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், லால்குடி நகரம், பூவாளூர் பேரூர் ஆகியவற்றிற்கு ஆங்கரை சரோஜா மகாலிலும், புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் ,புள்ளம்பாடி பேரூர் , கல்லக்குடி பேரூர் ஆகியவற்றிற்கு புள்ளம்பாடி கருப்பண்ணசாமி திருமண மண்டபத்திலும், மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்கு மணப்பாறை ஆர்.வி. திருமண மஹாலிலும், மருங்காபுரி வடக்கு ஒன்றியம், மருங்காபுரி தெற்கு ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சிகளுக்கு துவரங்குறிச்சி டி.ஏ.எஸ். திருமண மஹாலிலும், வையம்பட்டி வடக்கு ஒன்றியம், வைய்யம்பட்டி தெற்கு ஒன்றியம் ஆகியவற்றிற்கு வையம்பட்டி கவிதா திருமண மண்டபத்திலும், மணப்பாறை நகரத்திற்கு மணப்பாறை அரங்கர் திருமண மண்டபத்திலும் மனுக்கள் வாங்கப்படும்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்