பூத் கமிட்டி அமைப்பது குறித்து திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கலந்தாய்வு

பூத் கமிட்டி அமைப்பது குறித்து திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கலந்தாய்வு
X

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ப குமார் தலைமையில் நடைபெற்றது.

பூத் கமிட்டி அமைப்பது குறித்து திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க பணிகளில் இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவீரமாக இறங்கி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கடந்த வாரம் தேர்தல் பணி பற்றி ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.

அதே போல் எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உடனடியாக பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ண சமுத்திரம், பத்தாளபேட்டை, அரசங்குடி, கிளியூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்காக குமரேசபுரத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார் (முன்னாள் எம்பி) தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், பூத் வாரியாக மகளிரணி, பூத் வாரியாக இளைஞர் - இளம்பெண்கள் பாசறை.. ஆகியவை அமைப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திக், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுபத்திரா சுப்ரமணியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட கலை பிரிவு செயலாளர் எம் பி.ராஜா வட்டக் கழக செயலாளர்ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, துவாக்குடி நகர துணை செயலாளர் கணபதி, முன்னாள் ஊராட்சி செயலாளர் நவல்பட்டு பாலமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி முருகா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கோபிநாத், நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business